கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்படுவாரா?
கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்படுவாரா?
கற்பிட்டி பிரதேச சபை தலைவர் கைதா? புத்தளம் மாவட்டம், கற்பிட்டி பிரதேசத்தில் பள்ளிவாசல் துறை என்ற கிராமத்தில் கொக்கு குளம என்ற கலப்பினை அண்டிய பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நாட்டப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ள கண்டல் வகை தாவரங்களை அழித்திருப்பதாக ஹிரு சீ ஐ ஏ இற்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து உரிய இடத்திற்கு விரைந்த ஹிரு சீ ஐ ஏ குழுவினர் அவைகள் தொடர்பாக ஆராயத் தொடங்கினர்.
அக்குழுவின் தேடலின் முடிவில் அங்கு அதிகமான கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு, குவிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு கொண்டனர். மேலும் உப்பு வாய்க்கால் செய்வதற்கான அனுமதியினைப் பெற்று திருட்டுத் தனமாக இரண்டு இறால் பண்ணைகள் புதிதாக அமைக்கப்பட்டிருப்பதையும் மேலும் வனத்துறையினரினால் எல்லைக்கு போடப்பட்டிருந்த எல்லைக் கற்களும் பிடுங்கு வீசப்பட்டு இருப்பதனையும் தங்களின் கேமராக்களில் படம் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற கிராம வாசி ஒருவரிடம் இது தொடர்பாக வினவிய போது. இங்கு அதிகமான கண்டல் தாவரங்கள் இருந்ததாகவும், அவைகள் பிரதேச சபையின் தலைவரின் அதிகாரத்தினை முறைகேடாக பயன்படுத்தி அழித்ததாகவும் கற்பிட்டி பிரதேச சபை தலைவரின் மீது குற்றம் சுமத்தினார்.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கற்பிட்டி பிரதேச சபை தலைவரிடம் வினவியபோது இவைகள் அனைத்தும் எனக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்றும் இதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் கூறி முடித்துள்ளார்.
இவைகள் தொடர்பான வீடியோக்களை ஹிரு சீ ஐ ஏ தனது நிகழ்ச்சியில் வெளியிட்டத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி செயல
கம், புத்தளம் போலீஸ் பிரிவினர், வனஜீவராசிகள் திணைக்கள மற்றும் கடல் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
தற்போது கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் தீவிர விசாரனைப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாகவும் உள்ளிருந்து தகவல்கள் வெளியாகின்ற அதே வேளை தான் செய்த குற்றத்தினை மறைப்பதற்காக ஹிரு சீ ஐ ஏ குழுவினருக்கு இலஞ்சம் கொடுக்கும் வீடியோவும் ஹிரு சீ ஐ நிகழ்ச்சியில் வெளியாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
(அபூ பைஹா)

No comments:
Post a Comment