அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 500 திமிங்கிலங்கள்
அதில் பிழைத்திருந்த 108 திமிங்கிலங்கள்தான் தற்போது மீண்டும் கடலுக்குள்ள பத்திரமாக விடப்பட்டுள்ளன.
மீட்புப் பணியாளர்கள் முதலில் 270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பதைக் கண்டனர். ஆனால் அதன்பின் மீண்டும் ஒரு 200 திமிங்கிலங்கள் வந்து சேர்ந்தன. இதுவரை இல்லாத அளவிற்கு திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பது முதல்முறையாகும்.
மீட்புப் பணியாளர் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்து உயிருள்ள திமிங்கிலங்களை கடலுக்குள் விட்டுள்ளனர்.
ஆனால் தற்போது இறந்துபோன மீதமுள்ள திமிங்கிலங்களை எப்படி அகற்றுவது என்ற மிகப்பெரிய குழப்பம் எழுந்துள்ளது.
`பைல்ட திமிங்கிலங்கள்` என்று சொல்லக்கூடிய இவை ஏன் கரை ஒதுங்குகின்றன என்ற காரணம் தெரியவில்லை.
இருப்பினும் சில நிபுணர்கள், அவை தாங்கள் வேட்டையாடும் மீன்களைத் தொடர்ந்து கொண்டுவந்து இவ்வாறு கடலில் சிக்கிக் கொள்கின்றன என்கின்றனர்.
சில நிபுணர்கள், திமிங்கில கூட்டத்தில் ஒன்று தவறாக வழிநடத்தி மொத்த கூட்டத்தையும் கடலில் சிக்க வைத்துவிடுகிறது என்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 500 திமிங்கிலங்கள்
Reviewed by Author
on
September 27, 2020
Rating:

No comments:
Post a Comment