போதைப்பொருள் வழக்கு விசாரணை: நடிகை தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வாக்குமூலம்மொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென கூறி, நடிகை தீபிகா படுகோனேயிக்கு மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு, அழைப்பாணை விடுத்திருந்தது.
குறித்த அழைப்பாணைக்கு அமைய இன்று (சனிக்கிழமை) போதைப்பொருள் தடுப்பு பிரிவில் முன்னிலையாகி இருந்த தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்தி நடிகைகளான சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரும் இன்று விசாரணைக்கு முன்னிலையாவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நடிகை ரகுல் பிரீத் சிங் நேற்று விசாரணைக்கு முன்னிலையாகி இருந்தார். இதன்போது அவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் திரையுலகை சேர்ந்த சிலரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர்.
குறித்த விசாரணையின்போதே நடிகைகளான ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, இந்தி நடிகைகளான சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
போதைப்பொருள் வழக்கு விசாரணை: நடிகை தீபிகா படுகோனேயிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை
Reviewed by Author
on
September 26, 2020
Rating:
Reviewed by Author
on
September 26, 2020
Rating:


No comments:
Post a Comment