மன்னார் மாவட்ட அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தினால் கணித பாட மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைப்பு.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக கல்வியில் ஏற்பட்ட இடை வெளியை கருத்தில் கொண்டு 'மன்னார் மாவட்ட அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தின்' பணிப்பாளர் எஸ்.ஆர்.யதீஸ் குறித்த புத்தகங்களை இலவசமாக வழங்கி வைத்தார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் இவ் வருடம் கா.பொ.த. சாதாரண தர பரிட்சைக்கு தோற்றவுள்ள 136 மாணவர்களுக்கு பெறுமதியான எதிர் பார்க்கை 5 மாதிரி வினாத்தாள் அடங்கிய கணித பாட பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ்.இ. றெஜினோல்ட் தலைமையில் கல்லூரியின் பகுதி தலைவர் ஆசிரியர் ஆ.சுரேஸ் குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில் கணித பாட மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
.
மன்னார் மாவட்ட அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தினால் கணித பாட மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment