’ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை’
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், நேற்று (21) நடைபெற்றது.
இதன்போது, வவுனியா தெற்கு வலயத்தில் 23 ஆசிரியர்களும், வடக்கு வலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 145 பேரும், ஏனைய சில பாடங்களுக்கான ஆசிரியர்களின் வெற்றிடங்களும் நிலவுவதாக, வலயக் கல்விப் பணிப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், வடக்கில் 12 மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியரே இருப்பதாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் தொகுதிப் பாடசாலைகளை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், முல்லைத்தீவில் இருந்து வவுனியாவுக்கு ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனவும், இளங்கோவன் கூறினார்.
’ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை’
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment