அண்மைய செய்திகள்

  
-

இளைஞர்களுக்கான விசேட தலைமைத்துவ மாநாடு

நாடளாவிய ரீதியில் சமூக நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இளைஞர் யுவதிகளுக்கான விசேட 3 நாள் செயலமர்வு ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரஸான் டீ வைசர் தலைமையில் 25-28 திகதிவரை குருணாகல் மாவட்டத்தில் உள்ள தனியார் பயிற்ச்சி நிலையத்தில் இடம் பெற்றுவருகின்றது.

  குறித்த நிகழ்வில் நாட்டில் தொடர்சியாக ஏற்படுவரும் இன மத மோதல்களை இளைஞர்கள் ஊடாக தீர்து நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்குவது தொடர்பாகவும் சமூக வலை தளங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடான வெறுப்பு பேச்சு மற்று பொய் தகவல் பெண்களுக்கு எதிரான பாலியல் பேச்சுகள் எவ்வாறு சமூக ரீதியில் பாதிப்பை ஏற்படுவது என்பது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது தொடர்பாக தகுதி வாய்ந்த விரிவுரையாளர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டதுடன் நடைமுறை பயிற்சியும் வழங்கப்பட்டது.

  அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் பரப்பபட்டும் இவ்வாறான விடயங்களை நீக்குவது தொடர்பாகவும் அவற்றிற்கான இணையவழி முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான விரிவான விளக்கங்களும் வழங்கப்பட்டது குறித்த செயற்திட்டத்தில் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் சிங்கள முஸ்லீம் இளஞர்களை பிரதி நிதித்துவப்படுத்தி 250 இளைஞர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.








இளைஞர்களுக்கான விசேட தலைமைத்துவ மாநாடு Reviewed by Author on September 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.