விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம்..!
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவருக்கும், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் இருவரது உடல்நிலை குறித்தும் வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளதாக வைத்தியசாலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்றும், தொடர் மருத்துவச் சேவைகளினால் அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்துதின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், வைத்திய குழுவின் கண்காணிப்பில் உள்ளதாகவும் வைத்தியசாலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம்..!
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment