கடவுச்சீட்டு அச்சிடல் தொடர்பில் அரசின் தீர்மானம்
கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிட்டு வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் இருந்து செல்லும் அந்நிய செலாவணியை நாட்டுக்குள் தக்க வைத்து கொள்ளும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:
04. கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிட்டு வழங்குதல்
கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்கள் தற்போது வெளிநாட்டு அச்சக நிறுவனங்களில் அச்சிடப்படுவதினால் நாட்டில் இருந்து வெளியே செல்லும் அந்நிய செலாவணியை நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வகையில் இவ்வாறானவற்றை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிடுவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அது தொடர்பான திட்டம் குறித்து விரிவான வகையில் மதிப்பீடு செய்வதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
 
        Reviewed by Shaathana
        on 
        
September 17, 2020
 
        Rating: 



No comments:
Post a Comment