திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு
சேதுராமன் இறப்பதற்கு முன்பு ஈசிஆர் பகுதியில் தனது கிளினிக்கின் புது கிளையை தொடங்க பூஜை போட்டார். அந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சேதுராமன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார். அவர் இறந்த பிறகு ஈசிஆர் கிளையை தொடங்குவார்களா, என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் கணவன் விட்டுச் சென்ற வேலையை அவரின் மனைவி உமா தொடர்கிறார். இதையடுத்து ஈசிஆர் கிளையின் வேலைகளை முடித்து சேதுராமனின் பிறந்தநாளான இன்று மருத்துவமனையை தொடங்கியுள்ளனர். சேதுராமனின் நெருங்கிய நண்பரான சந்தானம் அந்த மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.
மருத்துவமனையில் சேதுராமனின் ஆளுயர கட்அவுட்டை வைத்துள்ளனர். அந்த கட்அவுட்டுன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கட்அவுட்டில் சிரித்த முகமாக இருக்கும் சேதுராமனுடன் சந்தானத்தை பார்த்த ரசிகர்கள் தமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment