கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அடாவடி -கைதுசெய்யப்பட்ட விவசாயிகள்
இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்கள் மாலை நான்கு மணியாகியும் விடுதலை செய்யப்படவும் இல்லை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவும் இல்லை என்பதால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா ஆகியோர் அறிவியல்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் திணைக்கள பிரதான அலுவலகத்திற்கு சென்ற பொழுது கைது செய்யப்பட்டவர்கள் அலுவலகத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் கைது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் வினவிய பொழுது அதற்கு பதிலளிக்க கூடியவாறான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்கவில்லை அங்கிருந்த தமிழ் பேசும் அதிகாரிகளிடம் வினவிய பொழுது அதற்கான பதிலை தர மறுத்ததுடன் பாராளுமன்ற உறுப்பினருடன் அனாகரிகமான முறையில் நடந்தும் கொண்டனர்.
இந்நிலையில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது இவர்கள் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும் என சிறீதரன் கேட்டுக் கொண்ட போதும் அவர்கள் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை என சம்பவ இடத்தில் இருந்த எமது ஊடகவியலாளர் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட வேண்டும் இல்லை எனில் இவ் இடத்தை விட்டு செல்ல முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களது அலுவலக வாயிலில் அமர்ந்ததன் பின்னர்
கைது செய்யப்பட்ட 12 பேரையும் அவர்களது உடமைகளையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மாலை 6 மணியளவில் முற்படுத்தியிருந்தனர் இவர்களை நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த இருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அடாவடி -கைதுசெய்யப்பட்ட விவசாயிகள்
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment