அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழில்
யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (04) காலை 9 மணி அளவில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது.
தமிழ் சம்பிரதாய முறைப்படி, மங்கள வாத்தியங்கள் இசைக்க அனைத்து மாநகர முதல்வர்களும் ஹோட்டலிற்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வரவேற்பு உரையாற்றி மாநாட்டை ஆரம்பத்து வைத்தார்.
இந்த மாநாட்டில், மாத்தளை, காலி, மட்டக்களப்பு, மாத்தறை, நுவரெலியா, அநுராதபுரம் உள்ளிட்ட மாநகர முதல்வர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அனைத்து மாநகர முதல்வர்களும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
.
.
அனைத்து மாநகர முதல்வர்களுக்கான மாநாடு யாழில்
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment