தீபாவளி பண்டிகைக் காலத்தில் மீண்டும் கொரோனா தீவிரமடையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
இதுகுறித்து கொரோனா வைரசுக்கான மாநில தொழில்நுட்பக் குழுவில் அங்கம் வகிக்கும் வைத்தியர் சுபாஸ் சாலுகே கூறுகையில், “நான் உட்பட பல சுகாதார அதிகாரிகளும் தீபாவளி பண்டிகை முடியும் வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் எந்த முன்னேற்றமும் அடைந்துவிட்டதாக நம்பவில்லை.
ஏனெனில், அந்த சமயத்தில் மக்கள் அதிக அளவில் வெளியே நடமாடுவார்கள்.
இதனால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, கடந்த சில நாட்களாக நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் கொரோனாவின் உச்சக்கட்ட நிலை முடிந்துவிட்டதாக எண்ணிவிடக் கூடாது.
கொரோனா இரண்டாவது அலையை தற்போது மறந்துவிடுங்கள், முதல் அலையே தீபாவளி வரை நம்மைத் துரத்தும்.
இதேவேளை, மக்களிடம் வீட்டிலேயே இருக்கும்படி இனிமேல் நாங்கள் கேட்க முடியாது. பல வேலைகள் ஆபத்தில் உள்ளன. பொருளாதாரமும் நகர வேண்டும். இந்நிலையில், நாம் பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் தொற்று பரவலைச் சரிபார்க்க முடியும். இதிலும் சில தொழில்நுட்ப சவால்கள் உள்ளன.
எனினும், கடந்த செப்டம்பரில் தமிழகத்தில் நாம் தினமும் 80 ஆயிரம் முதல் 90ஆயிரம் சோதனைகளை மேற்கொண்டோம். ஆனால், பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் சோதனை எண்ணிக்கை 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் மீண்டும் கொரோனா தீவிரமடையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
Reviewed by Author
on
October 10, 2020
Rating:

No comments:
Post a Comment