அண்மைய செய்திகள்

recent
-

கிராம அலுவலகர் விஜி கொலை தாெடர்பாக சட்டத்தரணி டெனிஸ் விடுக்கும் அவசர காேரிக்கை

அன்புக்குரிய நண்பர்களே!
மன்னார் பெருநிலப்பரப்பையே சோகத்தில் ஆழ்த்திச்சென்ற சம்பவம், விஜி G.S ன் படுகொலை. இதனை நாம் சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இரவு பகல் பாராது சில வேலைத்திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த நல்லதொரு சேவையாளன். 

 யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று இருப்போமெனில், நாளை இன்னும் பலரை இவ்வாறு இழக்க நேரிடும். அரச உத்தியோகத்தர்களும் யார் என்ன செய்தால் நமக்கென்ன என்ற மனநிலைக்கு வரக்கூடும், அதன் பின் மக்களாகிய நாம் அவர்கள் சரியாக சேவை செய்யவில்லை என்று குறைகூறுவதற்கு எந்தவிதத்திலும் அருகதையற்றவர்கள்.

 இனி விடயத்திற்கு வருகின்றேன்......... 

கடந்த திங்கட்கிழமை (09/11/2020) இலுப்பைக்கடவை பொலிசார் இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி இருந்தனர். இதில் ஒருவர் அரச சாட்சி மற்றையவர் சந்தேகநபர். 

 இதில் அரச சாட்சியாக கொண்டுவரப்பட்டவர் கௌரவ நீதவான் அவர்களிடம் கூறிய விடயங்கள் அனைத்தும் பொலிசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து முற்றிலும் முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றது. அவ்வாறு எனில் இந்த சந்தேகநபருக்கும் படுகொலைக்கும் சம்மந்தம் இருக்கின்றதா? இல்லையா என்ற சந்தேகம் எழுகின்றது. உண்மையில் இவர்தான் இதனை செய்திருப்பார் எனில் சட்டத்தில் உள்ள அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் உண்மையான குற்றவாளியை கண்டறிய வேண்டும். இவ்விடயம் தொடர்பில் இலுப்பைக்கடவை பொலிசாரின் புலன்விசாரணைக்கு நாம் ஒவ்வொருவரும் முடிந்த அளவு உதவிசெய்ய வேண்டும், மேலும் புலன்விசாரணை சரியாக நடைபெறுகின்றதா என்றும் அவதானிக்க வேண்டியுள்ளது.

 கடந்த தவணை சில விடயங்கள் தொடர்பில் விண்ணப்பம் செய்து நீதிமன்றத்தின் கட்டளையைப் பெற்றுள்ளேன். குறிப்பாக மண்வெட்டி பிடியில் இருக்கும் கறை என்ன என்பது தொடர்பில் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்புவது தொடர்பிலும், சில தொலைபேசி இலக்கங்கள் தொடர்பான அறிக்கை பெறுவது தொடர்பிலும். இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது, எனவே நண்பர்களே இவ்விடயம் தொடர்பில் ஏதாவது தெரியுமெனில் தயவு செய்து உதவி செய்யுங்கள்.

 இந்தப்படுகொலைக்கு பின்னால் இருப்பவன் எவனாக இருப்பினும் அதற்கான தண்டனையை பெறவேண்டும். தயவுசெய்து இதனை சாதாரணமாக கருதி கடந்து செல்ல வேண்டாம். அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் தயவு செய்து முயற்சி எடுப்போம் ........ ஏதாவது தெரியுமெனில் அதனை முகநூலில் பகிர வேண்டாம். தொடர்பு கொள்ளவும்...... 0772083020 அல்லது நேரில் சந்திக்கலாம். "எந்தப்பெரிய புத்திசாலியும் ஏதோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்பான்" 

 நன்றி இப்படிக்கு 
 பா.டெனிஸ்

கிராம அலுவலகர் விஜி கொலை தாெடர்பாக சட்டத்தரணி டெனிஸ் விடுக்கும் அவசர காேரிக்கை Reviewed by Author on November 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.