அண்மைய செய்திகள்

recent
-

சிறப்புற நடைபெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பவளவிழா!

 முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் பவளவிழா நிகழ்வு 05.06.2026 மற்றும் 06.06.2026 இரண்டு நாட்கள் சிறப்புற நடைபெற்றுள்ளது.

1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலை 75 ஆண்டுகளை தொட்டு 2026 ஆம் ஆண்டு பவளவிழாவினை கொண்டாடுகின்றது


 மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் பல பொறியிலாளர்கள்,வைத்தியர்கள்,நீதிபதிகள்,ஆசிரியர்கள்,அரசியல்வாதிகள் என  பல்துறைகளில் பல சேவையாளர்களை உருவாக்கிய பெருமை கொண்ட பாடசாலையாக முள்ளிவளை வித்தயானந்தாக்கல்லூரி தேசிய பாடசாலை அமைந்துள்ளது.


இரண்டு நாட்கள் காலை,மாலை என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற பவள விழா நிகழ்விற்கு பாடசாலை அதிபர் க.வீரசிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்


முதல் நாள் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக கல்வி அமைச்சின் தமிழ்பாடசாலைகள் அபிவிருத்திக்கிளை கல்விப்பணிப்பாளர் செ.பிரணவதாசன் அவர்களும் இ.கணேஸ்வரன் இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதிப்பொது முகாமையாளர் அவர்களும்  இரண்டாம் நாள் நடைபெற்ற நிகழ்விற்கு

மேல் நீதிமன்ற நீதிபதி அ.யூட்சன் அவர்களும் வடக்குமாகாண ஆளுனர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.


பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுள் மற்றும் பாடசாலையில் கல்விகற்று சிறந்த பெறுபேற்றினை பெற்றவர்கள்,பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலையின் அபிவிருத்திபணிகளுக்கு உதவிய பழையமாணவர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளின் பழையமாணவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.


சிறப்பாக வித்தியின் சிறப்பு மிகு மைந்தன் என்ற விருதி இருவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள் ஒருவர் வைத்தியத்துறையில் சமூகNசைக்காக தன்னை அர்ப்பணித்த வைத்தியக்கலாநிதி வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா அவர்களுக்கும் ஜக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திர அந்தஸ்து பதவியில் உள்ள கலாநிதி விஜயகுமார் நவநீதன் அவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.


தொடர்ந்து வித்தியானந்தா கல்லூரியின் பெருமைகூறும் வித்தியாதீபம் பவளவிழா சிறப்பு மலர் வெளியீட்டுவைக்கப்பட்டுள்ளது.

மலரினை பாடசாலை அதிபர் க.ஜெயவீரசிங்கம் அவர்கள் வெளியிட்டுவைக்க வடமாகாண ஆளுனர் அவர்கள் பெற்றுக்கொண்டார் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் பிரதமவிருந்தினரினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
















சிறப்புற நடைபெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் பவளவிழா! Reviewed by Vijithan on June 07, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.