அண்மைய செய்திகள்

recent
-

புட்டு புகழ் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்?

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவிற்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புட்டு சர்ச்சை பெரும் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 மாவீரர் நாள் அனுட்டிப்பதற்கு தடைகோரி யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது சமர்ப்பணம் செய்த யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி “புட்டும், சோறும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு தமிழர்கள், யுத்தத்தை முடித்ததன் மூலம் பீஸா சாப்பிடும் நிலைமையை உருவாக்கினோம்“ என தெரிவித்திருந்தார். இதற்கு நீதிமன்றத்திலேயே பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆட்சேபணை தெரிவித்தார். 

நீதிபதியும் அதிருப்தி தெரிவித்து, பொலிஸ் பொறுப்பதிகாரியை கட்டுப்படுத்தினார். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்கள் எங்கும் பிரசாத் பெர்னாண்டோவை வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அவருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக இன்று மாலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுவரை அதை உறுதிசெய்ய முடியவில்லை. எழுத்துபூர்வமான அறிவிப்பு எதுவும் அனுப்பி வைக்கப்படவில்லையென்றும் தெரிய வருகிறது.

புட்டு புகழ் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்? Reviewed by Author on November 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.