மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை – இராணுவத் தளபதி!
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தகவல்களை பொது மக்களிடம் மறைத்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது.
ஜனாதிபதி சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய கொரேனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
நேற்றைய நாளில் கொழும்பு மாவட்டத்தில் 271 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 46 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 12 பேரும், கேகாலை மாவட்டத்தில் 10 பேரும், காலி மாவட்டத்தில் 4 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் இருவரும், புத்தளம், இரத்தினபுரி, ஹம்பந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 271 பேரில் 230 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து அடையாளங் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் கொழும்பு வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள்.
நாம் தோல்வியடையவில்லை. எவரும் தோல்வியடையவில்லை. எப்படி தோல்வி என கூறுவது? மக்கள் தொகை அதிகமுள்ள அதேபோல் அதிக நீரோட்டம் நிறைந்த பகுதியாக கருதப்படும் கொழும்பில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
முழு நாட்டுக்கும் மீன் விற்பனை செய்யும் மத்திய நிலையத்தில் ஏற்பட்ட தொற்றே இன்றைய நிலைக்கு காரணம். தற்போது மினுவாங்கொட கொரோனா தொத்தணி முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கொத்தணி மூலமே நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாம் தோல்வியடையவில்லை. தோல்வியடைய போவதும் இல்லை.
நாட்டில் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை – இராணுவத் தளபதி!
Reviewed by Author
on
November 14, 2020
Rating:
Reviewed by Author
on
November 14, 2020
Rating:


No comments:
Post a Comment