அண்மைய செய்திகள்

recent
-

உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

 சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் தீவிர கண்கானிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில், மாதிரிகள் எடுக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று (24) மேற்கொள்ளப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு Reviewed by Author on November 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.