அண்மைய செய்திகள்

recent
-

பொது போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை தளர்த்தப்பட்ட பின்னர், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்ட வேண்டியதொன்றாக பொதுப் போக்குவரத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொடர்பில் 3 நடைமுறைகள் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 சாதாரண நடைமுறையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமாயின் அதாவது ஆசனங்களில் அமர்ந்தும், நின்றும் பயணிப்பதாயின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். மாறாக, ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மற்றும் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிப்பதாயின் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! Reviewed by Author on November 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.