அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலை – கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிவரை பதிவான தகவலின் அடிப்படையில் இப்புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. சீரற்ற வானிலை காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி கோணாவில் பகுதியில் பலத்த காற்றினால் பயன்தரு மரங்கள் முறிந்ததுடன், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலை – கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்கள் பாதிப்பு Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.