அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் புரவி சூறாவளி தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் தயார் நிலையில்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினம் புதன் கிழமை வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று நள்ளிரவின் பின்னர் மன்னார் மாவட்டத்தினுடாக புரவி சூறாவளி கடந்து செல்லும். மேலும் பலத்த காற்றும் வீசும் என்பதால் இதற்கான முன்னேற்ற கூட்டம் நடத்தப்பட்டு அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள், முப்படையினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

 இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்கள் குறிப்பாக கடலோரம் உள்ளவர்கள் தற்காலிக வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் பெரிய மரங்கள் உள்ள இடங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார். மேலும் இன்று இரவு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கிராம அலுவலகர்கள் ஊடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தேவை ஏற்படும் பட்சத்தில் பாடசாலைகளில் மக்கள் இடம் பெயர்ந்து அங்கு தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். 

 இதவேளை இன்றைய தினம் வெள்ளப்பாதீப்பு காரணமாக பாதீக்கப்பட்ட கிராமங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர்,அனார்த்த முகாமைத்துவ குழுவினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் விஜயம் மேற்கொண்டனர். இதன் போது பாதீக்கப்பட்ட கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் பாதீக்கப்பட்ட மக்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் போக்கு வரத்து வசதிகள் தொடர்பாக அறிவித்தல்களும் உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 மேலும் அவசர உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பாதீக்கப்படும் மக்கள் உடனடியாக மாவட்டச் செயலத்தினூடாகவும்,பிரதேசச் செயலகங்கள் ஊடாகவும் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மன்னாரில் புரவி சூறாவளி தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் தயார் நிலையில்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.