அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, பனகொடவைச் சேர்ந்த 71 வயது ஆணொருவர் கடந்த 18ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர், பிம்புரா ஆதார வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

 இவரது மரணத்திற்கான காரணம், இரத்த விஷமானமை மற்றும் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பைச் சேர்ந்த 52 வயதுடைய ஆணொருவர் கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். இவர், தனது இல்லத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும், கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண்ணொருவர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். இவர் கொழும்பு பொது மருத்துவமனையில் இருந்து பிம்பரா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று மற்றும் புற்றுநோயால் ஏற்படும் இரத்த விசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பைச் சேர்ந்த 44 வயது ஆணொருவர் கொழும்பு பொது மருத்துவமனையில் இருந்து வெலிசர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். 

இவர் கடந்த 19ஆம் திகதி உறிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கான காரணம் கொரோனா நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பண்டராகமவைச் சேர்ந்த 49 வயது ஆணொருவர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கான காரணம் நுரையீரலில் கொரோனா தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 176ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! Reviewed by Author on December 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.