யாழ்ப்பாணத்தில் வௌ்ள அபாயம்…
பாதிக்கப்படடுள்ள மக்களை இடர் நிலையிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.
Burevi சூறாவளியால் கிளிநொச்சி மாவட்டத்தில் 4,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளங்களை அண்மித்து வாழும் மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 2,227 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குடும்பங்களை சேர்ந்த 7,784 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் குறிப்பிட்டார்.
Burevi சூறாவளியால் வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கு, வட மேல் மாகாணங்களில் தொடர்ந்தும் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, புத்தளம் தொடக்கம், மன்னார் , காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அதிகாரி தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் வௌ்ள அபாயம்…
Reviewed by Author
on
December 05, 2020
Rating:

No comments:
Post a Comment