அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-மாவட்ட தொற்று நோய் பிரிவு பதில் வைத்திய நிபுணர்

 மன்னார் மாவட்டத்த்தில் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சைகள் தமது கண்கானிப்பின் கீழ் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் பிரிவு பதில் வைத்திய நிபுணர் வைத்தியர் சலினி நாணயகார தெரிவித்தார். 

 சர்வதேச எயிட்ஸ் ஒழிப்பு தினைத்தையொட்டி விசேட விழிர்ப்புணர்வு கலந்துரையாடல் இன்றைய தினம் புதன் கிழமை(9) காலை மன்னார் மாவட்ட பிராந்திய சகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது. -அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மாவட்ட தொற்று நோய் பிரிவு பதில் வைத்திய நிபுணர் வைத்தியர் சலினி நாணயகார அவ்வாறு தெரிவித்தார். 

 அவர் மேலும் தெரிவிக்கையில்,, 15 வயது தொடக்கம் 24 வயதுடைக்கு உற்பட்ட இளைஞர் யுவதிகள் அதிகமாக எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தரவுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் 2019 ஆம் ஆண்டு வரை 439 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 15 வயது தொடக்கம் 24 வயதுடைக்கு உற்பட்ட 54 இளைஞர் யுவதிகள் எச்.ஐ.வி தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர். வட மாகாணத்தில் தற்போது வரை 125 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் மன்னார் மாவட்டத்த்தில் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 இவர்களுக்கான சிகிச்சைகள் எமது கண்கானிப்பின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நோயை தடுப்பது மக்கள் அனைவருடைய கடமையாகும்.ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து சுகாதார துறைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்த நோயில் இருந்து வெற்றி கொள்ள முடியும். -இதற்கு இலங்கை முழுவதிலும் 34 பாலியல் சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

 எச்.ஐ.வி தொற்றுக்கான தாக்கம் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நிலையங்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பின் போது மன்னார் மாவட்ட தொற்று நோயியல் சிகிச்சை பிரிவு பதில் வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி அவர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
               




மன்னார் தற்போது வரை 9 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-மாவட்ட தொற்று நோய் பிரிவு பதில் வைத்திய நிபுணர் Reviewed by Author on December 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.