அண்மைய செய்திகள்

recent
-

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்

மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளார். மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நிதியமைச்சர் நியமித்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவிலிருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண விலகியுள்ளார். 

 மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிட்டு வேறொரு நபரை நியமிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார். தான் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றுவதால், ஊடக சந்திப்புகளில் கலந்துகொண்டு வருவதாகவும் இவ்வாறான விசாரணைக்குழுவில் இணைந்து செயற்படுவது கடினம் எனவும் இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் அவர் கோரியுள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக விசாரணை களை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அஜித் ரோஹண அதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்


.
மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல் Reviewed by Author on December 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.