அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி ரூபாய் பெறுமதியான 9 கிலோ தங்கம் பறிமுதல்

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 9 கிலோ கடத்தல் தங்கம் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இலங்கையில் இருந்து தங்கக்கட்டி, வாசனை பொருட்கள், நறுமண சோப்பு வகைகள், தமிழகத்தில் இருந்து கஞ்சா, பீடி இலைகள், உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் சமையல் மஞ்சள், மருந்து, மாத்திரைகளை கடல் வழியாக மர்மப் படகு மூலம் கடத்தப்பட்டு வருகின்றன. தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு கெடுபிடியையடுத்து கடத்தல் தொழிலை மர்ம கும்பல் தங்கள் ஏஜன்ட்கள் மூலம் கமிஷன் அடிப்படையில் எவ்வித தொய்வின்றி அரங்கேற்றி வருகின்றனர். ஏஜன்ட்கள் ஆலோசனை படி, இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்படும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை மன்னார் வளைகுடா தீவு மணலில் புதைத்து வைக்கும் புது யுக்தியை சமீப காலமாக பின்பற்றி வருகின்றனர்.

 சுங்கத்துறை, மெரைன் போலீசார் கண்காணிப்பு பணி குறையும் நேரத்தில், மணலில் புதைத்துள்ள தங்கக்கட்டிகளை ஏஜன்ட்கள் படகுகள் மூலம் கரை சேர்க்கின்றனர். இங்கிருந்து காரில் சென்னை கொண்டு சென்று விற்று பணமாக்கி வருகின்றனர். தங்கக்கட்டி கடத்தல் கடந்த காலங்களில் பலமுறை தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கக் கட்டிகள் மண்டபம் அடுத்த மன்னார் வளைகுடா மணாலி தீவுக்கு அருகே படகில் பதுக்கி வைத்திருப்பதாக இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

 இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை(11) அதிகாலை முதல் மண்டபம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படை வீரர்கள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து மணாலி தீவு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டு படகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த இருவரை பிடித்தனர். அவர்கள் இருவரும் தங்க கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மண்டபம் மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த பையஸ் அகமத்;, முகமது பாரூக் ஆகிய என தெரிந்தது. 

 அவர்களை பிடிக்க முற்பட்ட போது அருகில் மற்றோரு படகில் இருந்த முகமது ரசாக்,ஜாஸ் அகமத்,ஜெயனுல் பயாஷா ஆகிய மூவரும் இவர்களை தப்பி செல்ல உதவியுள்ளனர். இதனையடுத்து கடலோரா காவல் படை நெருங்கி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் வீச முயற்சித்த போது அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்த கடலோர காவல் படையினர் இரண்டு நாட்டுப்படகு மற்றும் 9 கிலோ 700 கிராமத் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணைக்காக மண்டபம் கடலோர கால் படை முகாமிற்கு அழைத்து வந்தனர். 

 விசாரணையில், இலங்கையில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை மணாலி தீவு பகுதியில் மறைத்து வைத்து விட்டு கடலோர காவல் படை ரோந்து கப்பல் சென்றவுடன் மண்டபம் மரைக்காயர்பட்டிணம் கடற்கரைக்கு எடுத்து வர இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் யாரும் தங்கத்தை கொண்டு வந்து இவர்களிடம் கொடுக்கும் போது கடலோர காவல் படையின் ரோந்து படகு வருவதை கண்டு மணாலி தீவு பகுதிகளில் மறைந்துள்ளனரா என இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் (தண்ணீர் மற்றும் நிலத்தில் செல்வது) ரோந்து கப்பல் மூலம் தீவு முழுவதும் தேடி வருகின்றனர். நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ 700 கிராம் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ 4.5 கோடி என கூறப்படுகிறது.
             





மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கோடி ரூபாய் பெறுமதியான 9 கிலோ தங்கம் பறிமுதல் Reviewed by Author on December 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.