ஊழலை அழிப்பதே எமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி
வீண் விரயம் மற்றும் ஊழலை அழிப்பது தமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பாக கருதுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெரும்பான்மை பலத்துடன் தனது வெற்றியை ஆதரித்தபோது ஊழல் இல்லாத வினைத்திறனான நாட்டிற்காக தங்களின் விருப்பத்தினையும் வலுவான ஆதரவினையும் நாட்டு மக்கள் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் பற்றிய சம்பவங்களை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிப்பதன் ஊடாக குடிமக்களுக்கான கடமையை உரிய வகையில் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊழல் கலாசாரத்தில் இருந்து நாட்டை விடுவித்து ஒரு சிறந்த தேசத்தை அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்
.
.
ஊழலை அழிப்பதே எமது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு – ஜனாதிபதி
Reviewed by Author
on
December 09, 2020
Rating:

No comments:
Post a Comment