அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவை சூழ்ந்துள்ள பனி மூட்டம்!

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிகாலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

 ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவை சூழ்ந்துள்ள பனி மூட்டம்! Reviewed by Author on December 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.