பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!
பண்டிகை காலங்களில் பயணத்தை குறைக்க பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்யவும்.
அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும்.
# பண்டிகை காலங்களில் குடும்பம் அல்லது நட்பு கூட்டங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதுடன், அத்தகைய கூட்டங்களை உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தவும்.
# பண்டிகை காலத்திற்காக ஏனையவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது உடல் ரீதியான தொடர்பிலிருந்து விலகி இருக்கவும் அனைத்து நேரங்களிலும் சமூக தூரத்தை பராமரிக்கவும்.
# வயதானவர்கள் வேகமாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று கூறிய சுகாதார பணிப்பாளர், குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை பெரிய கூட்டத்திற்கு வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும். இந்த காலகட்டத்தில் வெளிநபர்களின் வருகையை மட்டுப்படுத்தவும்.
# தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, பொது இடங்களில் சமூக தூரத்தை பராமரிக்கத் தவறும் நபர்களுக்கு அல்லது சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறும் நபர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுமாறு வலியுறுத்த பொதுமக்களுக்கு உரிமை உண்டு.
# பண்டிகை காலங்களில் பொருட்களை வாங்குவதற்கு கிடைக்கக்கூடிய ஒன்லைன் விநியோக சேவைகளைப் பயன்படுத்தவும்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டல்கள் வெளியீடு!
Reviewed by Author
on
December 10, 2020
Rating:

No comments:
Post a Comment