அண்மைய செய்திகள்

recent
-

வீதியில் இறந்து கிடக்கும் மாடுகள்

வவுனியா ஓமந்தை ஏரிபொருள் மீள் நிரப்பு நிலையத்திற்கு அருகே ஏ9 வீதியில் நான்கு மாடுகள் உடல்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றன. 

 இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா யாழ்ப்பாணம் பிரதான வீதியான ஏ9 வீதியில் வாரத்தில் இரு தடவையேனும் கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணமேயுள்ளது. 

 இந்நிலையில் ஓமந்தையில் ஏ9 வீதியில் வாகனம் மாடுகளின் மீது மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என ஓமந்தை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் விபத்துக்குள்ளான வாகனம் தொடர்பிலான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


வீதியில் இறந்து கிடக்கும் மாடுகள் Reviewed by Author on December 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.