கைப்பற்றப்பட்ட 21,900 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிப்பு
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் களமெட்டிய மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகை நேற்று (29) இரவு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி குறித்த குறித்த மஞ்சள் தொகையை பொலிஸார் மீட்டு இருந்தனர்.
பின்னர் குறித்த மஞ்சள் தொகை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அம்பலாந்தொட்ட லுனம மயானத்தில் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 21,900 கிலோ மஞ்சள் தொகை அழிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கைப்பற்றப்பட்ட 21,900 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிப்பு
Reviewed by Author
on
December 30, 2020
Rating:

No comments:
Post a Comment