மன்னார் மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தர் கொலை தொடர்பில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு!
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று புதன் கிழமை (30) மேலதிக அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர் தொடர்பான சட்ட மருத்துவ அறிக்கை, நீதிமன்றத்திற்கு நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் அதிகாரிகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
மன்னார் மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தர் கொலை தொடர்பில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு!
Reviewed by Author
on
December 30, 2020
Rating:

No comments:
Post a Comment