வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன் சம்பவ இடத்திலேயே முகநூல் காதலிக்கு அனுப்பிய SMS! சுவாரஸ்ய சம்பவம்
கடந்த சில தினங்களுக்குமுன் வவுனியாவை சேர்ந்த குறித்த இளைஞன் முகநூலுடாக வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையில்,
இருமுறை அந்த பெண்ணை நேரில் சந்திக்க முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக காதலியை சந்திக்க நேற்றையதினம் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இதனால் இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது என எண்ணிய இளைஞர் அதிக வேகத்தில் இருசக்கர வாகனத்தை செலுத்திக்கொண்டு, தொலைபேசி அழைப்பு வருமோ என்ற எண்ணத்தில் சென்று விபத்தை ஏற்படுத்தி காயமடைந்துள்ளார்.
தொடர்ந்து பொது மக்கள் நோயாளர் காவு வண்டியை அழைத்த நிலையில் சம்பவவிடத்திற்கு நோயாளர்காவு வண்டி விரைந்துவந்த நிலையில் ஊழியர்கள் நோயாளர்காவு வண்டியில் ஏற்ற தூக்க முற்பட்ட போது,
பொறுங்க நான் விபத்துக்குள்ளாகிவிட்டேன் என காதலிக்கு ஒரு SMS அனுப்பிவிட்டு வருகிறேன் என கூறியதால் ஊழியர்கள் கோபமடைந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன் சம்பவ இடத்திலேயே முகநூல் காதலிக்கு அனுப்பிய SMS! சுவாரஸ்ய சம்பவம்
Reviewed by Author
on
December 15, 2020
Rating:
Reviewed by Author
on
December 15, 2020
Rating:


No comments:
Post a Comment