அண்மைய செய்திகள்

recent
-

புயல் மற்றும் சூறாவளி அனர்த்தங்களின் போது எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகள்...

மிக முக்கியமாக உங்கள் தொலைபேசிகளிலும், வலுச் சேமிப்பகங்களிலும்(Powerbank) மின்சார இருப்பை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் புயலின் போது மின்சாரம் தடைப்படலாம். ஏனெனில் தகவல்களையும், எச்சரிக்கைகளையும் பெற்றுக் கொள்வதற்காக இது மிக அவசியம். 

 01. வீட்டின் சுவர், கூரை என்பன பாதுகாப்பாக உள்ளதா என்பதனை உறுதிப்படுத்தல்.
 02. வீட்டிலுள்ள மரங்களின் நுனிகள், கிளைகளை வெட்டி விடுதல். 
 03. புயல் காலத்தின்போது, சிலவேளைகளில் வெள்ள அனர்த்தம், சுனாமி அனர்த்தம், புயல் அனர்த்தம் அறிவிக்கப்பட்டால் பாதுகாப்பாக தங்கக் கூடிய உயரமான இடத்தினையும், அதற்கு சென்று சேரக்கூடிய வழியையும் அறிந்திருத்தல். 
04. அவசர காலத்தில் கொண்டு செல்லக் கூடிய பொதி ஒன்றினை தயாரித்தல். 05. தண்ணீர்ப் போத்தல்கள் உலருணவுகள். 
06. தீப்பெட்டி, மண்ணெண்ணெய் விளக்கு(லாம்பு)தயார்ப்படுத்தல் 
07. நீர்த்தொட்டிகளை நிரப்பி வைத்திருத்தல் 
08. வாகனங்களை உறுதியான இடத்ததில் நிறுத்தவும். 
09. மரத்திலான அல்லது பிளாஸ்டிக்கிலான தளபாடங்களையும் சூறாவழியின்போது இழக்கப்படக் கூடிய பொருட்களையும் எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். 

 புயலின் போது... 

 01. கதவுகள் ஜன்னல்களை பூட்டவும். 
 02. மின்சாரம், சமையல் வாயு என்பவற்றை நிறுத்தவும். 
 03. கடும் மழையின் போது வெள்ள அபாயம் ஏற்படும் பகுதியில் நீங்கள் இருந்தால் அவசர காலத்தில் எடுத்துச் செல்ல வேண்டிய பொதியினை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் வேளைக்கே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும். 
 04. புயல் வீசும்போது சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து வையுங்கள். 
 05. மின்கலத்தில் இயங்கும் வானொலியை செவிமடுத்து அல்லது உங்கள் தொலைபேசி யைப் பாவித்து புயல் தொடர்பான புதிய தகவல்களை அறிய வேண்டும். 
 06. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருப்பதை உறுதிப்படுத்துங்கள். 
 07. கட்டிடடம் உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும். 
 08. புயலின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வேகம் வீழ்ச்சியடைந்ததும் புயல் முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம். வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும். 09. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம். 

புயலின் பின்னர்... நிலைமை பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை வெளியே செல்ல வேண்டாம். 

 1. சமையல் வாயு வெளியேற்றத்தினைச் சரிபார்க்கவும். ஈரமாக இருப்பின் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.
 2. ஆலோசனைக்காகவும், எச்சரிக்கைக்காகவும் வானொலியை தொடர்ந்து கேட்கலாம். அல்லது தோலைபேசிகளை பயன்படுத்தலாம். 
 3. சேதமடைந்த மின்சார இணைப்புக்கள், பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள், தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். வெள்ளநீர்ப்பகுதிக்குள் செல்ல வேண்டாம். 
4. பழகிய இடமாக இருந்தாலும் வெள்ளநீர்ப் பகுதிக்குள் உட்செல்ல வேண்டாம். 5. உடைந்த அல்லது சேதமடைந்த கட்டுமானங்கள் மீது அதீத கவனம் செலுத்துங்கள். 

 தற்காலிக வீடுகளில் உள்ள அன்பான உறவுகளே... இயலுமாயின் வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்குங்கள். முக்கியமாக சிறுவர்கள், குழந்தைகள் வயதான முதியோர் உள்ளவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பான மாற்றிடமொன்றை நாடுங்கள். ஏனெனில் தகரங்கள், கிடுகுகள், கூரைத்தகடுகள் காற்றினால் தூக்கியெறியப்படலாம். கடும் சுழற்சியுடன் கூடிய காற்றும் மழையும் உங்கள் மண்சுவரை சேதப்படுத்தலாம். எனவே மிக அவதானத்துடன் இருங்கள்.

 புயல் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள தன்னார்வத் தொண்டர்களே, நாளை பகல் உங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதுமான விழிப்புணர்வினை வழங்குங்கள். இந்த ஆபத்தினை வெற்றிகரமாக வெல்வதற்கான தந்திரோபாயங்களை எடுத்துச் சொல்லுங்கள். 

புயல் மற்றும் சூறாவளி அனர்த்தங்களின் போது எம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகள்... Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.