ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்றா? - சன் பிக்சர்ஸ் விளக்கம்
‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலத்துக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படத்தில் பணியாற்றிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதில் படக்குழுவில் இருக்கும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்தும் மற்ற படக்குழுவினருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்திருக்கின்றன. பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்றா? - சன் பிக்சர்ஸ் விளக்கம்
Reviewed by Author
on
December 23, 2020
Rating:
Reviewed by Author
on
December 23, 2020
Rating:


No comments:
Post a Comment