அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவ்விடையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை(22) பிரமதர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். -குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,, வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அண்மையில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக கட்டிட இடிபாடுகள், மீன் பிடி படகு , இயந்திரங்கள், வலைகள், கடல் உபகரணங்கள், விவசாயம், சொத்துக்கள், உடைமைகள், குடியிருப்புகள் சேதமடைந்தும், காணாமலும் போயுள்ளன.  

பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய விவசாயிகளினால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் எவ்வாறு இந்த சூழ் நிலையிலிருந்து மீள முடியும்?. எனவே இந்த மக்களின் அவல நிலையைப் பார்க்கவும், இந்த சூழ் நிலையிலிருந்து மீண்டு அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தவும் உதவுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். -பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மக்களின் துன்பத்தைத் தணிக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்.என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். Reviewed by Author on December 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.