மன்னார் நானாட்டான் கிராம சேவகர் நீராட சென்ற நிலையில் மாயம் மது போதைதான் காரணமா? -இரண்டாம் இணைப்பு
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் நான்கு கிராம சேவையாளர் உட்பட ஆறு பேர் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று(29) மதியம் 12 மணியளவில் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் இழுக்கப்பட்ட அள்ளுண்டு சென்ற நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை கிராம மக்கள் மற்றும் கடற்படையினர் தேடி வருகின்றார்கள்.
வருட இறுதி கொண்டாட்டத்திற்கு சென்றவர்கள் உயிலங்குளம், வங்காலை, கட்டைக்காடு முசலி போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கிராம சேவையாளர்கள் நால்வரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் காணாமல் போன கிராம சேவையாளரை தோடும் பணி இடம் பெற்று வருகின்றது.
காணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என்று நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
.
மன்னார் நானாட்டான் கிராம சேவகர் நீராட சென்ற நிலையில் மாயம் மது போதைதான் காரணமா? -இரண்டாம் இணைப்பு
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment