தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாடல் !
மேலும் தடுப்பூசியின் தேவை மற்றும் தடுப்பூசியைப் பெற வேண்டிய தரப்பினர் உள்ளிட்ட விடயம் தொடர்பாக முடிவை எட்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து 192 நாடுகள் தடுப்பூசி கோரியுள்ளதாகவும், நன்கொடையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அதேவேளை தடுப்பூசியை வாங்கவும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி புதிய மாறுபாடு வைரஸின் முந்தைய வீரியத்தை விட 70% அதிக வலிமையானது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பாக கலந்துரையாடல் !
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment