மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்கு விஜயம்.
அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.
-இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.
மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இன் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.
குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை(29) காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர்,ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிப்பு-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த பகுதிக்கு விஜயம்.
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment