மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ந்தும் விழிர்ப்புணர்வுடன் செயல்பட வேண்டும்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
குறித்த கலந்தரையாடலின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கை யிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் டிசம்பர் 6 ஆம் திகதிக்கு பின்னர் தற்போது வரை கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை.
தற்போது புது வருடத்தை ஒட்டி மக்கள் அதிகமாக மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்ற காரணத்தை பயன்படுத்தி வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு மக்கள் வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக பண்டிகைக்காலங்களை ஒட்டி பட்டாசு விற்பனைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மன்னாரிற்கு வியாபாரிகள் வருகை தந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
மேலும் வங்கிகளின் தன்னியக்க இயந்திரம்(ஏ.ரி.எம்) ஊடாக பணப்பறிமாற்றத்தை மேற்கொள்ள கூடி நிற்பதனையும் அவதானிக்கின்றோம்.
இந்த நிலையில் சகல துறை சார் அதிகாரிகளுடன் இன்றைய தினம்(29) செவ்வாய்க்கிழமை காலை மாவட்டச் செயலகத்தில் அவசர கலந்துரையாடல் ஊடாக கலந்துரையாடி உள்ளோம்.
இதன் அடிப்படையில் மக்களுக்கான விழிர்ப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சகல இடங்களிலும் பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலகர்கள் , வெளிக்கள அலுவலகர்கள் முழுமையாக இறக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள். மக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
மன்னார்-மதவாச்சி பிரமான வீதி,முருங்கன் பகுதியில் நாளை புதன் கிழமை(30) காலையில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் வரும் வாகனங்கள் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக வியாபார நோக்கத்திற்காக சென்று வரும் வாகனங்கள் முருங்களின் அமைக்கப்பட்டுள்ள கிருமி தொற்றும் நீக்கும் நிலையத்தில் கிருதி தொற்று நீக்கப்பட்டு உரிய அனுமதியுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
மன்னார் நகருக்குள் வரும் வாகானங்கள் மன்னார் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் மீள் பரிசோதனை செய்யப்பட்டு மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.
மன்னார் மாவட்டத்தில் சுகாதார துறையினர் சிறப்பாக செயல் படுவதன் காரணமாக மன்னார் மாவட்டத்தை கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
உத்தியோகத்தர்கள், பொலிஸார்,இராணுவம் மற்றும் கடற்படையினர் ஆகியோர் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்ககின்றனர்.
தோடர்ந்தும் அனைவரது ஒத்துழைப்போடும் எமது மாவட்டத்தை 'கொரோனா' தொற்று இல்லாத மாவட்டமாக செயல் படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ந்தும் விழிர்ப்புணர்வுடன் செயல்பட வேண்டும்-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
Reviewed by Author
on
December 29, 2020
Rating:

No comments:
Post a Comment