அண்மைய செய்திகள்

recent
-

சுவிட்சலாந்தில் 18 ஜனவரி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது.

இறுக்கமான கட்டுப்பாடுகள் வருத்தமளிக்கிறது. ஆயினும் தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டுள்ளது மகிழ்ச்சி. முதல் முறையாக, மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் தயார் நிலைக்கு தாங்கள் முன்னேறியுள்ளதாகவும் சுவிஸ் சுகாதார அமைச்சர் Alain Berset தெரிவித்தார். புதிய விதிமுறைகள்... சுவிட்சலாந்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளான உணவுச் சாலைகள், பொழுதுபோக்கு, ஓய்வு மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள் இன்னும் 5 வாரங்களுக்கு நீடிக்கப்படுகிறது.

 18 சனவரி முதல் நாளாந்த பயன்பாட்டு தேவைகள், பொதுச் சேவைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து நிலையங்களும் மூடப்படும். Kiosk, எரிபொருள் நிலைய கடைகள் 19.00 வரை, ஞாயிறு மூட வேண்டும் என்றிருந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் Homeoffice முறையில் பணியாற்ற உத்தரவு.

 சாத்தியமில்லாத இடங்களில் ஒரு அறையில் ஒன்றுக்கு மேற்பட்டோர் பணிபுரியும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். அலுவலக வாகனங்களிலும் இது பொருந்தும். பொது இடங்களிலும், வீடுகளிலும் ஆகக்கூடியது 5 பேர் மட்டுமே ஒன்றுகூட அனுமதி. இவை தவிர Covid-19 காரணமாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான இழப்பீட்டு உதவிகள் பற்றியும் இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது.

சுவிட்சலாந்தில் 18 ஜனவரி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது. Reviewed by Author on January 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.