கிளிநொச்சி குளமொன்று உடைப்பெடுக்கும் ஆபத்தில் –மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அணைக்கட்டின் துருசு பகுதியின் அருகில் குளத்திலிருந்து நீர் அணைக்கட்டின் ஊடாக வெளியேறிவருகிறது. இது அணைக்கட்டின் மிக மோசமான நிலைமையாகும். தற்போது இராணுவம் மற்றும் பொது மக்கள் நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் இணைந்து மண் மூடைகளை அடுக்கி தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் சேவியர் கடைச் சந்திக்கருகில் குளத்தின் கீழ் பகுதி மற்றும் கந்தன்குளத்தின் நீர் வெளியேறுகின்ற உருத்திரபுரம் பகுதியில் வாழ்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி குளமொன்று உடைப்பெடுக்கும் ஆபத்தில் –மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Reviewed by Author
on
January 21, 2021
Rating:

No comments:
Post a Comment