யாழில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்- பேருந்து திடீரென கடந்த கார் மீது மோதி விபத்து!!
பஸ் வந்தவேகத்தில் காரினை மோதியதுடன் தொலைபேசி கம்பம், மின்விளக்கு கம்பம் என அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்தையும் , அருகில் உள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தின் முகப்பு பகுதியையும் உடைத்து கொண்டு சென்று மோதி நின்றது.
இந்நிலையில் ஆடைகள் விற்பனை நிலையத்திற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர் ஒருவரின் தலையில் கடும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஆடைகள் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள வாகன சேவிர்ஸ் நிலையத்தின் ஒருபகுதியும் சேதமடைந்ததுடன் அங்கு நின்ற கார் ஒன்று சிறு சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
மோதிய போக்குவரத்து சபை பஸ்ஸின் முகப்பு பகுதி கடுமையாக சேதடைந்துள்ளதுடன் ஆசனங்களும் உடைந்துள்ளன.
பஸ் மோதிய காரில் பயணித்தவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்துக்கு அலுவலக விடயமாக வந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
யாழில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரம்- பேருந்து திடீரென கடந்த கார் மீது மோதி விபத்து!!
Reviewed by Author
on
January 22, 2021
Rating:

No comments:
Post a Comment