அண்மைய செய்திகள்

recent
-

விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் அறிமுகம்

விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் ஒன்று விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்களில் பச்சை நிற பிளவுகளுக்கு மத்தியில், சாம்பல் நிற குமிழ்கள் இருப்பது போல முதலில் தென்பட்டுள்ளன. அப்படத்தினை ஆய்வு செய்ததன் பின்னர் அக்குமிழ்கள் மரங்களுக்கிடையில் அலைந்து திரியும் யானைகள் என தெரிய வந்துள்ளது.

 இதனையடுத்து, விண்வௌியில் இருந்து எடுக்கப்படும் படங்களை விஞ்ஞானிகள் ஆப்பிரிக்க யானைகளைக் கணக்கிட பயன்படுத்துகின்றனர். புவியின் மேற்பரப்பிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் தன் சுற்றுவட்டப் பாதையில் புவியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களிலிருந்து இந்தப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

 இந்த தொழில்நுட்பத்தால், மேக மூட்டம் இல்லாத ஒரு நாளில், 5,000 சதுர கிலோமீட்டம் தூரம் வரை யானைகளின் வாழ்விடத்தை கணக்கிடுவதற்கு முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யானை எண்ணும் பணிகள் இயந்திர கற்றல் (Machine Learning) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் பணிகளுக்கும் இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் அறிமுகம் Reviewed by Author on January 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.