மட்டு.வில் கொரோனா தொற்றுடையவர் மரணம்!
மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொராேனா தொற்று காரணமாக கடந்த 16ம் திகதி 79 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த ஆணின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொராேனா தொற்றின் ஆபத்து உணரப்பட்டு அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டது.அதன்படி உயிரிழந்த ஆணின் மனைவி (71-வயது) கொரோனா தொற்றால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இதேநேரம் அரசடி கிராம சேவையாளர் பிரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன், பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 22 பேர் கொராேனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு உள்ளதாகவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
மட்டு.வில் கொரோனா தொற்றுடையவர் மரணம்!
Reviewed by Author
on
January 22, 2021
Rating:

No comments:
Post a Comment