அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் Covishield தடுப்பூசி தயாரிக்கும் Serum Institute நிறுவனத்தில் தீ விபத்து

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் புனே மாநிலத்தில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதேவேளை, குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மருந்து தயாரிக்கும் பணி சீரம் நிறுவனத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் Covishield தடுப்பூசி தயாரிக்கும் Serum Institute நிறுவனத்தில் தீ விபத்து Reviewed by Author on January 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.