அண்மைய செய்திகள்

recent
-

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்படும் மரக்கறிகள் குறைவடைந்துள்ளமையினால் விலைகள் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதற்கிணங்க, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 ஒரு கிலோகிராம் பூசணிக்காயின் விலை 240 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சோளம் 140 ரூபாவாகவும் காணப்படுகின்றது. இதேவேளை, பீட்ரூட் 240 ரூபாவிற்கும் கேரட் 230 ரூபாவிற்கும் லீக்ஸ் 130 ரூபாவிற்கும் விற்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளின் வரவு சீராகும் வரை இந்த விலையேற்றம் தொடரும் என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு Reviewed by Author on January 31, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.