அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுவில் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொண்டு வந்த காணிகளை மதஸ்தாபனத்திற்கு வழங்குவதை எதிர்த்து பொது மக்கள் போராட்டம்

மடு பிரதேசச் செயலக பிரிவுக்கு உட்பட்ட 'கோவில் மோட்டை' பகுதியில் பாரம்பரியமாக அரச காணியில் மக்கள் காடுகளை துப்பரவு செய்து குளம் அமைத்து விவசாய செய்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் அக் காணிகளை மத ஸ்தாபனம் ஒன்றுக்கு வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டதை எதிர்து அக்கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை காலை மடு பிரதேச செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

 குறித்த போராட்டம் தற்போது வரை தொடர்;கின்றது. -கடந்த 30 வருடமாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 'கோவில் மோட்டை' பகுதியில் 27 குடும்பங்கள் விவசாய செய்கையை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை முன்னோக்கி வருகின்ற நிலையில் குறித்த மக்களின் பராமரிப்பில் இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட காணியை மடு தேவாலயத்தின் ஊடாக மதம் சார்ந்து செயற்படும் அமைப்பு ஒன்றுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

 இந்த நிலையில் குறித்த செயற்பாட்டை நிறுத்தி அந்த காணிகளை பாரம்பரியமாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு வழங்க கோரி குறித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . குறித்த கோவில் மோட்டை காணியானது தற்போது வரை அரச காணியாக காணப்பட்டு வருகின்ற நிலையில் மடு ஆலய பரிபாலகரினால் கடந்த காலங்களில் அக்காணி தங்களுக்கு சொந்தமான காணி என குறிப்பிடப்பட்டு அக்காணியில் பயிர்ச் செய்கை மேற்கொண்ட மக்களிடம் குத்தகை பணமும் பெறப்பட்ட நிலையில் தற்போது அம் மக்கள் அரச காணியில் பயிற்செய்கை மேற்கொள்வதற்கு குத்தகை வழங்க முடியாது என தெரிவிக்கபட்ட நிலையில் முறுகள் நிலை தோற்றம் பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 இருப்பினும் இம்மாதம் 20 திகதி இடம் பெற்ற குறித்த விவசாய காணி தொடர்பான கூட்டத்தில் அரச சட்டத்தின் அடிப்படையில் அப்பகுதியில் விவசாயத்தை மேற்கொண்ட மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் விவசாய காணி வீதம் காணி வழங்குவதாகவும் மடு திருத்தலத்திற்கு என ஒரு தொகுதி காணி வழங்குவதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தஙிகட்கிழமை மேற்படி மக்களால் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. -தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அந்த மக்கள் தெரிவித்தனர். 

 குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமேல் கருத்து தெரிவிக்கையில்,, குறித்த காணி தொடர்பான பிணக்கு பலவருடங்களாக நீடித்த நிலையில் அன்மையில் எனது தலைமையில் மக்களின் ஆலோசனையின் பின்னர் அவர்களின் முன் மெழிவின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மக்கள் போராட்டம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது. குறித்த காணியானது மடு தேவாலயத்துக்கு வழங்குவதற்கு என கடந்த காலங்களில் இடம் பெற்ற காணிப் பயன்பாட்டு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலே இவ்வாறான குழப்ப நிலை அண்மைக் காலமாக தோற்றம் பெற்றுள்ளது.

 எனவே மக்களின் குழப்ப நிலை காரணமாக கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி உயர் மட்ட முடிவுக்காக அனுப்பி வைக்கவுள்ளதாகவும் விரைவில் உயர் மட்ட கலந்துரையாடலின் பின்னர் இறுதியான முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.. .
                 















மன்னார் மடுவில் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொண்டு வந்த காணிகளை மதஸ்தாபனத்திற்கு வழங்குவதை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் Reviewed by Author on January 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.