பெண்கள் குழுவினரால் மன்னார் வீடமைப்பு அதிகாரசபை முற்றுகை
கடந்த 2018 ஆண்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் வழங்கப்பட்ட வீட்டுதிட்டங்களுக்கான நிதி மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை விடுவிக்கப்படத நிலையில் பழைய வீடுகளும் இன்றி புதிய வீடும் முடிவுறுத்தப்படத நிலையில் பல்வேறு அசெளகரியங்கள் மத்தியில் வெள்ளப்பதிப்புக்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் வீடு அமைப்பதற்கு என பெறப்பட்ட கடன்களை கூட திரும்ப செலுத்த முடியாத நிலையில் கடன் சுமை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத்திட்ட பயனாலிகளான பெண்கள் குறித்த போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விட்டுத்திட்டங்களுக்கான இரண்டாம் மூன்றாம் கட்டங்களுக்கான நிதியே விடுவிக்கப்பாத நிலையில் இந்த அரசாங்கம் புதிய வீட்டு திட்டங்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கிடு செய்வதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
எனவே எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாங்களும் இந்த நாட்டின் குடி மக்கள் என்பதை உணர்ந்து முழுமைப்படுத்தப்படாத வீட்டு திட்டங்களுக்கான நிதியையும் முடிவுறுத்திய வீட்டு திட்டங்களுக்கான மிகுதி பணத்தினையும் விரைவில் விடுவித்துதறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்கள் குழுவினரால் மன்னார் வீடமைப்பு அதிகாரசபை முற்றுகை
Reviewed by Author
on
February 03, 2021
Rating:
Reviewed by Author
on
February 03, 2021
Rating:






No comments:
Post a Comment