அண்மைய செய்திகள்

recent
-

பேருந்துடன் மோதியதில் மாணவன் பலி

ஹொரவ்பொத்தானை - கபுகொல்லாவ பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (11) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

 இவ்வாறு உயிரிழந்த மாணவன் ருவன்வெளி மத்திய மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்று வந்த ஹொரவ்பொத்தானை - 01ம் கட்டை மொரகொட மூதலான பகுதியைச் சேர்ந்த ஆர் எம் கே எம்.த.சில்வா (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவ்பொத்தானையிலிருந்து வாகொல்லாகட பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவன் உழவு இயந்திரம் மற்றும் கெப் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பேருந்து சாரதியின் அசமந்தப் போக்கினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இவ்விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சாரதியை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



பேருந்துடன் மோதியதில் மாணவன் பலி Reviewed by Author on March 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.