மன்னார் மடு தேவாலய பகுதியில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் செயல் படுத்தப்பட்ட நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான், கே.திலீபன்,இலங்கைக்கான இந்திய துணைதூதுவர் எஸ்.பாலசந்திரன் , உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
-இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயரின் ஆசீர் வாதத்துடன் நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் வருகை தந்த அதீதிகளினால் வைபவ ரீதியாக நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மடு தேவாலய பகுதியில் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.
Reviewed by Author
on
March 11, 2021
Rating:

No comments:
Post a Comment